மருத்துவர் நம்பெருமாள்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி இன்று (ஜூலை 24) காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில், புகழ்பெற்ற மருத்துவரும் அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் மதிப்புறு தலைவருமான 'பத்மஸ்ரீ' திரு. நம்பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















