நாடாளுமன்றத் தேர்தல் 2024:மறுமலர்ச்சி தி.மு.க.தலைமைக் கழக அறிவிப்பு

by Editor / 20-01-2024 10:33:22am
நாடாளுமன்றத் தேர்தல் 2024:மறுமலர்ச்சி தி.மு.க.தலைமைக் கழக அறிவிப்பு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன் பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கீழ்காணுமாறு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப் படுகிறது.

1. ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் -கழக அவைத் தலைவர்
2. மு.செந்திலதிபன் -கழகப் பொருளாளர்
3. ஆவடி இரா.அந்திரிதாஸ் -அரசியல் ஆய்வு மைய செயலாளர்
4. வி.சேஷன் -தேர்தல் பணிச் செயலாளர்

மறுமலர்ச்சி திமுக சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.

1. தி.மு.இராசேந்திரன் -கழகத் துணைப் பொதுச்செயலாளர்
2. ஆ.வந்தியத்தேவன் -கழக கொள்கை விளக்க அணி செயலாளர்
3. வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் -கழக தணிக்கைக் குழு உறுப்பினர்
4. ப.த.ஆசைத்தம்பி - கழக இளைஞரணி செயலாளர்

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
20.01.2024

 

Tags : நாடாளுமன்றத் தேர்தல் 2024

Share via