ரயில் முன் பாய்ந்து தற்கொலை

by Editor / 15-05-2026 03:56:52pm
 ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ஆக்கிடாவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு அருள்ராஜ், தினேஷ் ஆகிய 2 மகன்கள். இருவரும் எலக்ட்ரீசியன்கள். 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் ராஜாமணி இறந்துவிட்டார். கணவர் இறந்தத சோகத்தில் இருந்த ஜானகி, நேற்று முன்தினம்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய், தந்தையை இழந்த துக்கம் தாங்காமல் 2-வது மகன் தினேஷ் (24) நேற்று  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
 

 

Tags :

Share via
Logo