வெள்ளியங்கிரி மலையேறிய 8 பக்தர்கள் பலி.. வனத்துறை புதிய திட்டம்
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஆன்மிக பயணத்தில் நடப்பாண்டில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் உயிரிழப்பை தடுப்பதற்காக, அடுத்தாண்டு முதல் இணைய வழி முன்பதிவை மேற்கொள்ள வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
Tags :


















