டெல்டா மாவட்டங்கள் வழியாக தென் மாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்  

by Editor / 07-11-2023 08:51:24pm
டெல்டா மாவட்டங்கள் வழியாக தென் மாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்  

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை - திருநெல்வேலி  ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  திருநெல்வேலி - சென்னை சிறப்பு ரயில் (06070) நவம்பர் 9, 16, 23 ஆகிய வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில்  சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) நவம்பர் 10, 17, 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூரிலிருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும் இந்த ரயில்கள்  கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

 

Tags : டெல்டா மாவட்டங்கள் வழியாக தென் மாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்  

Share via