வந்த வேகத்தில் இந்த ஆட்சி வீழ்ந்து போகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 19-08-2026 10:47:54am
வந்த வேகத்தில் இந்த ஆட்சி வீழ்ந்து போகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக கூட்டத் தொடரை புறக்கணித்து வெளியேறிய பின் செய்தியாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். பேட்டியின் போது ,சவுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட தமிழக மீனவரை ஈரான் கடற்படை சுட்டுக் கொன்று ஒரு வாரம் ஆகியும் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக தமிழக அரசு எந்த விதமான முயற்சியை எடுக்கவில்லை என்றும் கர்நாடக வனப்பகுதிகளில் காணாமல் போன மாடு தேடிச் சென்ற மூன்று தமிழர்களை வனத்துறையினர் சுட்டு கொன்றதற்கும் தமிழக அரசு எந்த விதமான முயற்சியையும் எடுக்கவில்லை என்றும் ஏதோ ஒரு வேகத்தில் இந்த அரசு வந்துவிட்டது. எம்எல்ஏக்களாக ஆகிவிட்டார்கள் . ஆட்சி அமைந்து விட்டது .ஆனால் ,வந்த வேகத்தில் இந்த ஆட்சி வீழ்ந்து போகும் என்றும் அவர் கோபத்தை வெளிப்படுத்தினார். நீர்வளத்துறை அமைச்சர் ,பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் தாங்கள் வழங்கிய மசோதாக்கள் மீதான குறிப்பை பதிவு செய்யுமாறு சபாநாயகரிடம் வேண்டினார்.

 

Tags :

Share via

More stories

Logo