கூடலூர் அருகே 2-வது முறையாக  வீட்டை இடித்துத்தள்ளிய காட்டு யானை

by Editor / 28-09-2021 04:40:10pm
கூடலூர் அருகே 2-வது முறையாக  வீட்டை இடித்துத்தள்ளிய காட்டு யானை


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொழிலாளி வீட்டை 2-வது முறையாக காட்டு யானை இடித்து சேதப்படுத்தியதால் பதற்றம் நிலவுகிறது. 


நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள வரைமுறை ஊராட்சி உட்பட்ட பல்வேறு கிராமங்களில் காட்டு யானையின் அட்டகாசம் காரணமாக விவசாயிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் வீடு மற்றும் பயிர்களை இழந்து வருகின்றனர்.சதிங்கள் இரவு மேலம்பலம் ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானை தொழிலாளி வீட்டை 2-வது முறையாக இடித்து சேதப்படுத்தியுள்ளது.

இதனால் பதற்றம் அடைந்துள்ள கிராமமக்கள், காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் காட்டு யானையால் சேதமைந்த வீட்டை சீரமைக்க உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளிடம் ஆதிவாசி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். காட்டு யானையை விரட்டுவதில் அலட்சியம் காட்டுவதாக கிராமமக்கள் குற்றம் சாட்டும் நிலையில், இதே நிலை நீடித்தால் போராட்டம் நடத்துவோ ம் என எச்சரித்துள்ளனர் .

 

Tags :

Share via

More stories