விழிப்புணர்வு நடமாடும் பிரசார வாகனத்தை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் தொடங்கிவைத்தார்.

by Editor / 09-06-2022 02:51:47pm
விழிப்புணர்வு நடமாடும் பிரசார வாகனத்தை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் தொடங்கிவைத்தார்.

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக வியாழக்கிழமை அன்று (09.6.2022) உலக லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது. ரயில் பாதையும் சாலையும் சந்திக்கும் இடம் எனப்படுகிறது. பெரும்பாலான விபத்துக்கள் இந்த லெவல் கிராஸிங் நடைபெறுவதால் லெவல் கிராசிங்கை கவனமாக கடப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்த உலக அளவில் லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக மதுரை கோட்ட பாதுகாப்பு பிரிவு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த உலக அளவிலான விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மதுரை கோட்டம் சார்பாக நடமாடும் பிரச்சார வாகனம் மூலம் பாதுகாப்பு ஊழியர்களுடன் மதுரையிலிருந்து திருச்சி வரை லெவல் கிராசிங் கேட்டுகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் லெவல் கிராசிங்கை பாதுகாப்பாக கடப்பது பற்றி பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடமாடும் பிரசார வாகனத்தை மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். லெவல் கிராசிங்குகளில் ரயில் கடக்கும் வரை பொறுமை காட்டாமல் பணியில் உள்ள ரயில்வே ஊழியருடன் தகராறு செய்து அவரை பணி விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு இந்திய ரயில்வே சட்டம் 1989 பிரிவு 146 - ன் கீழ் 6 மாத சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். அதேபோல இருபுறமும் மூடி உள்ள ரயில்வே கேட், சங்கிலி போன்றவற்றை ரயில்வே ஊழியர் அல்லாதவர் திறந்தால் இந்திய ரயில்வே சட்டம் 1989 பிரிவு 160 - ன் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும் இதே பிரிவின் கீழ் இருபுறமும் முடியுள்ள ரயில்வேகேட், சங்கிலி போன்றவற்றை உடைத்து சேதப்படுத்துவோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ரயில்வே லெவல் கிராஸிங்குகளில் ரயில் கடக்கும் வரை பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும். ரயில் பாதையை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கடக்க வேண்டும். இவற்றை மீறும்போது ரயில்வே சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே  விபத்துக்களை தவிர்க்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார்.

 

Tags : Divisional Railway Manager Padmanabhan Anand launched the awareness campaign vehicle.

Share via