நீர் திறப்பால் பாதிப்பு இருக்காது - அமைச்சர் மா..சுப்பிரமணியன்

by Staff / 30-11-2023 12:25:11pm
நீர் திறப்பால் பாதிப்பு இருக்காது - அமைச்சர் மா..சுப்பிரமணியன்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்படுவதால பாதிப்பு இருக்காது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பின் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 15,000 கனஅடி நீர் திறந்தாலும் சென்னைக்கு பாதிப்பு ஏற்படாது. அடையாறு முகத்துவாரம் அகலப்படுத்தப்பட்டுள்ளதால் தண்ணீர் தடையின்றி கடலில் சென்று சேருகிறது. கரையோர மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றார்.

 

Tags :

Share via

More stories