சென்னையில் கனமழை : 2 பேர் பலி
சென்னையில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகள் ஆங்காங்கே மழை நீரால் மூடி காணப்படுகிறது. இந்தநிலையில், மேற்கு மாம்பலத்தில் மழையில் குடைபிடித்துக் கொண்டு செல்போன் பேசியபடி சென்ற மணிகண்டன் என்பவர், கீழே விழுந்தும், தி.நகரில் சாலையோர மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு இளைஞர் ஒருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :



















