காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் உடல் நல குறைவின் காரணமாக அனுமதி

by Admin / 25-03-2026 09:39:31am
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் உடல் நல குறைவின் காரணமாக அனுமதி

நேற்று இரவு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, புதுடில்லி கங்காராம்  மருத்துவமனையில் உடல் நல குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்பு தொடர்பான  சுவாச பிரச்சனைகள் காரணமாக அவர் உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவ க் குழுவினர் கண்காணிப்பில் உள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட தட்ப வெட்ப சூழ்நிலையின் காரணமாக உலக நலப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. தீவிரமான பாதிப்பு எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் அருகில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி வத்ரா மருத்துவமனையில் உள்ளனர்.

 

 

Tags :

Share via