நாம் தமிழர் கட்சியினர் கைது

by Admin / 31-12-2024 11:30:27am
 நாம் தமிழர் கட்சியினர் கைது

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கு அதிகமானோா் கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த இப் போராட்டத்தில், காவல்துறையின் அனுமதி பெறவில்லை என்பதனால் நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

 

Tags :

Share via