தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் கைது.

by Editor / 31-12-2024 11:35:19am
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட  சீமான் கைது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் நாதக கட்சி சார்பாக நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்திய சீமான் மற்றும் நாதக தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags : தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் கைது.

Share via