கொடைக்கானல் மலைப்பகுதியில் 7 வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பூக்கும் சிறு குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்குகின்றன

by Editor / 19-12-2022 09:58:02am
கொடைக்கானல் மலைப்பகுதியில் 7 வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பூக்கும் சிறு குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்குகின்றன

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் சிறு குறிஞ்சி பூ தற்போது பூத்துக்குலுங்குகிறது. இந்த குறிஞ்சி பூ குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. இவற்றில்  150 வகைகள் இந்திய நாட்டில் மட்டும் தென்படுகின்றன.

 இந்த குறிஞ்சி பூக்கள் முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே பூக்கும் த‌னிச்சிற‌ப்பு வாய்ந்தது. இந்த‌ குறிஞ்சி மலர்ச்செடிகள் மலை சார்ந்த  இடங்களில் மட்டுமே வளர்கின்றன. மேலும் கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் இந்த குறிஞ்சி மலர் வகைகள் வளரும்.


பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி பூக்கள் பூக்கின்றன. 6 வருடங்களுக்கு ஒரு முறை சிறு குறிஞ்சி பூக்களும், வருடத்திற்கு ஒரு முறை ஓடை குறிஞ்சி மலர்கள் பூப்பது குறிஞ்சி பூ வகைகளின் தனிசிறப்பாகும். 7 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ வகைகள் ஸ்டோபிலியாந்தஸ் காஸ்பிட்டேட்டஸ் என்ற வகையை சேர்ந்ததாகும்.

 இவ்வ‌கை அதிசய குறிஞ்சி பூ கடைசியாக தமிழகத்தில் 2015 ஆம் ஆண்டில் பூத்தது. அதன் பிறகு தற்போது  இந்த வருடத்தில் சிறு குறிஞ்சி பூ மேல்ம‌லைக்கிராம‌ப்ப‌குதிக‌ளில் பூத்து குலுங்குகின்ற‌து. குறிப்பாக மேல்மலை கிராமங்களான மன்னவனூர்,பூம்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் உள்ள வயல் பகுதியிலும், ப‌சுமைபோர்த்திய‌ ம‌லைத்தொட‌ர்க‌ளிலும்,  புத‌ர்ப‌குதிக‌ளிலும் இந்த சிறு குறிஞ்சி பூக்கள் த‌ற்போது பூத்து குலுங்க துவ‌ங்கியுள்ள‌ன‌.குறிஞ்சி பூவில் இருந்து தேனீக்கள் தேன் எடுக்கும் காட்சி பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .

 

Tags :

Share via