மரக்கழிவில் மகத்தான சிற்பங்கள்
நாகர்கோவில் பகுதியில் உள்ள 'கொல்வேல்' என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஜய் பிச்சுமணி.தற்போது சென்னையில் வசிக்கும் இவர் முதுநிலை ஒவியப்படிப்பு படித்தவர்.நல்ல முழுமையான மரங்களை வாங்கி அதை கடைந்து சிற்பம் செய்வது மரச்சிற்பமாகும்.
ஆனால் இவரோ மக்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய மரக்கட்டைகளில் இருந்து அதன் தன்மைக்கேற்ப ரம்பம், உளி உள்ளீட்ட பொருட்களை பயன்படுத்தி மர ஒவியம் படைக்கிறார்.சென்னையில் மழை வெள்ளம் காரணமாக விழுந்து வீணாகக் கிடந்த மரங்களைப் பார்த்ததும்தான் இவருக்குள் இப்படி ஒரு எண்ணம் வந்துள்ளது.வீணாகக் கிடந்த மரங்களையும் மரக்கடைகளில் ஓதுக்கிய தள்ளிய மரத்துண்டுகளையும் கொண்டு மர ஒவியம் படைத்துவரும் மணிகண்டன் தனது படைப்புகளை 'கொல்வேல்' என்ற தலைப்பில் கண்காட்சியாக வைத்துள்ளார்.சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுசில் நடந்துவரும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பல மர ஒவியங்கள் வித்தியாசமானவையாக இருக்கின்றன.
Tags :