தண்டனையை எதிர்த்து ராகுல் மேல்முறையீடு

கிரிமினல் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை மேல்முறையீடு செய்வார். காங்கிரஸ் சட்டக்குழு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தி கடந்த மார்ச் 23ஆம் தேதி அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்று மக்களவை உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுலை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதானி குழுமத்தின் மீதான மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்க வலியுறுத்தியும், நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.
Tags :