சென்னை ஐஐடிக்கு ரூ.110 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்

by Editor / 30-01-2024 10:41:38pm
சென்னை ஐஐடிக்கு ரூ.110 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்

சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் மற்று ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் செய்யறிவு தொழில்நுட்பம் சார்ந்தபாடப்பிரிவுகளுக்காக பிரத்யேகமாக, ரூ.110 கோடியில் புதிதாக கல்வி வளாகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவரான சுனில் வத்வானி என்பவர் இதற்கான பெரும்பகுதிசெலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து புதிதாக அமையவுள்ள கல்வி வளாகத்திற்கு வத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ என அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் பயின்ற முன்னாள் மாணவரான சுனில் வாத்வானி,ஐ-கேட் மற்றும் மாஸ்டெக் டிஜிட்டல் நிறுவனங்களின் இணை நிறுவனராக உள்ளார். இந்நிலையில், ஐஐடிஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில், சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வி காமகோடிமற்றும் சுனில் வத்வானி இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 இது குறித்து பேசிய சுனில் வத்வானி,”உலகிலுள்ள முன்னணி செய்யறிவு தொழில்நுட்பம் சார்ந்த கல்வி வளாகங்களுள் ஒன்றாக விளங்குவதை இலக்காக கொண்டு இந்த புதிய மையம் செயல்படும் என்றும், அரசு மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு, டேட்டா சயின்ஸ் மற்றும் செய்யறிவு சார்ந்த துறைகளில் தேவைப்படும் உதவிகளைஇந்த மையம் வழங்கும்” என்று அவர்தெரிவித்தார்.

 

Tags : ஐஐடிக்கு ரூ.110 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்

Share via