சத்தீஷ்கரில் நக்சல் தாக்குதல்: 3 வீரர்கள் வீரமரணம்.
சத்தீஷ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படைவீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சல்கள் பாதிப்பிற்குள்ளான மாவட்டம் ஆகும். இங்கு டீக்கல்குடியம் என்ற கிராமத்தில் நக்சல்களுக்கு எதிராக பாதுகாப்புபடையினர் தேடுதல் நடத்தினர். அப்போது நக்சல்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதில் இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் , மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
Tags : Naxal attack in Chhattisgarh: 3 soldiers martyred