72 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிக்கு மாவுக்கட்டு.

தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையம் கல்யாணிபுரம் ஊரைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் பாலமுருகன். சரித்திர பதிவேடு ரௌடியான பாலமுருகன் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஆதாய கொலை, திருட்டு மற்றும் 72-க்கும் மேலான பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.
17.05.2024ம் ஆண்டு தேனி பெரியகுளம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் திருச்சூர் High Security Prison-ல் அடைக்க கொண்டு செல்லும்போது சிறை முன்பு காவல் வாகனத்தில் இருந்து தப்பிச் சென்றவரை காவலர்கள் தேடிவந்தனர்.
போலீசாரிடமிருந்து தப்பிச்சென்ற ரௌடி பாலமுருகனை பிடிப்பதற்காக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் கடையம் அருகே ரௌடி பாலமுருகன் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று பாலமுருகனை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது போலீசாரிடமிருந்து தப்ப முயன்று கால் முறிவு ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து தற்போது திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags : 72 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிக்கு மாவுக்கட்டு.