அவசரமாக பாலத்தில் தரையிறங்கிய விமானம் காருடன் மோதிய கோர விபத்து

by Staff / 15-05-2022 02:48:13pm
அவசரமாக பாலத்தில் தரையிறங்கிய விமானம் காருடன் மோதிய கோர விபத்து

அமெரிக்கா மியாமி நகரில் என்ஜின் கோளாறு அவசரமாக தரையிறங்கிய இலகு ரக விமானம் ஒன்று  கார் மீது மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். 3 பயணிகளுடன் பறந்த இலகு ரக விமானத்தின் எஞ்சின் திடீரென பழுதான நிலையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. எதிர்திசையில் வந்த காரும் விமானமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விமானம்  தீப்பற்றியது இதில் விமானத்தில் பயணித்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார் மற்ற இரு பயணிகள் காரில் வந்த குழந்தைகள் உள்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக  காயங்களுடன் உயிர் தப்பினார்.

 

Tags :

Share via