சமுதாய வளைகாப்பு விழா: 70கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை

by Staff / 20-10-2022 04:11:02pm
சமுதாய வளைகாப்பு விழா: 70கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை

செங்கோட்டை காலாங்கரை யாதவா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவிற்கு செங்கோட்டை நகர்மன்ற தலைவா் இராமலெட்சுமி தலைமைதாங்கினார். நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியன், பொன்னுலிங்கம் என்ற சுதன், பேபி ரெசவு பாத்திமா ஆகியோர் முன்னிலைவகித்தனா். குழந்தை வளா்ச்சித்துறை திட்ட அலுவலக கண்காணிப்பாளா் சாகுல்ஹமீது அனைவரையும் வரவேற்று பேசினார். 

அதனைதொடா்ந்து குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கலைவாணி கா்ப்பகால பராமரிப்பு பற்றியும், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில்  வட்டார வேளாண்மை துணை அலுவலா் சேக்முகைதீன், சமுதாய நாட்டாமை கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனா். 
விழாவில் 70கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களும், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்  இளநிலை உதவியாளா் இருளப்பன், மேற்பார்வையாளா்கள் சிவகாமி, அண்ணாமலை மற்றும் பழனியம்மாள், வட்டார ஒருங்கிரணப்பாளா் உதயராணி,  மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் வட்டார உதவியாளா் சண்முகசுந்தரி நன்றி கூறினார்.

 

Tags :

Share via

More stories