திருடர்கள் 300 பேர் ஊடுருவல்

by Staff / 20-10-2022 04:09:30pm
 திருடர்கள் 300 பேர் ஊடுருவல்

தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி செயின் பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டு 300 கொள்ளையர்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் உள்ள கே.வி.குப்பம், திருச்சி ராம்ஜி நகர், வேலூர், பேரணாம்பட்டு, மதுரை மேலூர் ஆகிய வெளியிடங்களில் இருந்து வந்துள்ள கொள்ளையர்கள் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இவர்கள் தவிர சென்னையை சேர்ந்த கொள்ளையர்களும் தீபாவளி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதற்கு திட்டம் வகுத்து செயல்படுவதும் தெரியவந்துள்ளது.
 

 

Tags :

Share via
Logo