மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி இது சாதாரண வெற்றி அல்ல.. முதலமைச்சர்.

by Editor / 08-06-2024 10:44:07pm
 மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி இது சாதாரண வெற்றி அல்ல.. முதலமைச்சர்.

நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி என்பது சாதாரணமான வெற்றி அல்ல. 2004-ம் ஆண்டு, 20 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நமக்குப் பெற்றுத் தந்த வெற்றி இது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த தேர்தலில் அந்த ஒன்றையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது வென்றுவிட்டோம். இரண்டாவது தேர்தலில், முழுமையான வெற்றியைப் பெறுவது என்பது சாதாரணமான சாதனை அல்ல, வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாகும் என திமுக எம்.பி.-க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

 

Tags : மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி

Share via