நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் துரைமுருகனை கைது செய்து திருச்சி அழைத்து சென்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தங்கியிருந்த நிலையில், போலீசார் இன்று (ஜுலை 11) சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளனர்.
Tags :