Lift-ல் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே லிப்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளார். முகமது ஆசிப் (12) என்ற சிறுவன் தனது சித்தி வேலை செய்யும் தனியார் அச்சகத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள திறந்தவெளி லிப்டில் ஏறி, இறங்கி சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது
Tags :