சிபிஎஸ்இ பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை மும்மொழி கட்டாயம்

by Editor / 22-04-2025 01:13:53pm
சிபிஎஸ்இ பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை மும்மொழி கட்டாயம்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 2025-26ம் கல்வி ஆண்டு முதல் 8ம் வகுப்பு வரை மும்மொழி கற்பது கட்டாயம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் அனைத்து சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 2025-2026ம் கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள், 8ம் வகுப்பில் மூன்றாவது மொழியில் தேர்ச்சி பெறாத நிலையில், 9ம் வகுப்பில் அதே மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்.
 

 

Tags :

Share via