மின்வாரியம் தனியாரிடம் விடப்படாது - செந்தில் பாலாஜி உறுதி

by Editor / 22-04-2025 01:19:02pm
மின்வாரியம் தனியாரிடம் விடப்படாது - செந்தில் பாலாஜி உறுதி

தமிழ்நாடு மின்வாரியம் தனியாரிடம் விடப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பேசிய அவர், ஒரு கோடி பயனாளிகளுக்கு ஒரு ரூபாய் கூட மின் கட்டணம் உயரவில்லை. அதிமுக ஆட்சியில் 52% மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, தேர்தலுக்கு முன்னதாக 4% குறைக்கப்பட்டது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சிக் காலத்தில் மின் கட்டணம் 30% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. கிடப்பில் உள்ள திட்டங்கள் அனைத்தும் முடிக்கப்படும் என்றார்.

 

Tags :

Share via