அரசு பேருந்தில் பயணித்த 13 பயணிகளுக்கு விரைவில் பரிசு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பயணிகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆகஸ்டு மாதத்திற்கான குலுக்கல் முறையில் குரு பிரசாத், ராஜா ஞானபிரகாசம், சபரிகிரி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், 10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள 13 பயணிகளுக்கும் விரைவில் பரிசுகள் வழங்கப்படும்.
Tags : அரசு பேருந்தில் பயணித்தால்