ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.. 4.5 ரிக்டர் பதிவு

by Editor / 17-08-2021 09:44:59am
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.. 4.5 ரிக்டர் பதிவு

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சிக்கிய நிலையில் அங்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இருந்தது.

அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே தோஹாவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருகின்றன. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

மேலும் அங்கிருந்து அதிபர் அஷ்ரப் கானியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டினர். இதையடுத்து அவர் நாட்டில் தலிபான்களால் வன்முறை ஏற்படக் கூடாது என்பதால் வெளியேறிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

 

Tags :

Share via