18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி நாளை முதல்வர் தொங்கிவைக்கிறார்
20ஆம் தேதி முதல் 18வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "செஞ்சிலுவை சங்கம் தமிழக கிளையின் சார்பில் 2.18 கோடி மதிப்புள்ள ஆக்ஸிஜன் செறிவூடிகள் வழங்கப்பட்டது. ஊரடங்கு மட்டுமே தொற்று பரவலை தடுக்கும் ஒரே வழி. மருத்துவர் ராமன் என்பவர் மரணம் அடைந்ததாகவும் அதற்கு ரெம்டெசிவர் மருந்துதான் காரணம் எனவும் எங்களுக்கு ஒரு புகார் வந்தது. அதன்படி விசாரிக்கும் பொழுது அவர் பயன்படுத்திய ரெம்டெசிவர் மருந்தை சோதனை செய்ததில் அது போலியான ரெம்டெசிவர் என தெரியவந்தது. திண்டிவனம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இந்த ரெம்டெசிவர் மருந்தானது வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மருத்துவமனைக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொற்று இருப்பவர்கள் வெளியில் வந்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் இயக்கமாக மாறி எல்லோரும் கை கொடுத்தால் தான் கொரோனாவிலிருந்து மீண்டு வர முடியும். 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி 20 ஆம் தேதி முதல் முதல்வரால் தொடங்கப்பட உள்ளது. தற்போது ஆக்சிஜன் புனிதமான பொருளாக மாறியுள்ளது. அதனைப் பெற்றுக் கொள்வதற்கு இரவு பகல் பாராமல் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் உழைத்து கொண்டிருக்கின்றனர்" என தெரிவித்தார்.
Tags :