பிரபல நடிகை திடீர் தற்கொலை

பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே (25) தற்கொலை செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஒரு ஹோட்டலில் நடிகை இறந்து கிடந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நடிகை அகன்ஷா துபே புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக வாரணாசியில் இருந்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்தது, நடிகை அங்குள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றார். அவரது உடல் சாரநாத் ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என தெரிகிறது.
Tags :