பழையன கழிதல்.. புதியன புகுதல் ....போகி பண்டிகை

by Admin / 13-01-2025 01:55:28am
பழையன கழிதல்.. புதியன புகுதல் ....போகி பண்டிகை

பழையன கழிதல்......மார்கழியின் இறுதியிலும் ..புதியன புகுதல் .......தையின் தொடக்கத்திலும்... தென்னிந்திய மக்களின் கனவாக- நம்பிக்கையாக திகழும் திருநாள் ,

 பழைய பொருட்களை எல்லாம்  எரித்து புதியன தொடங்குவதற்கான குறியீடாக ..

..தென்னிந்திய  மக்கள் மார்கழி மாதத்தை விடை கொடுத்து தம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் அக்னியில் எரித்து..... நேற்றோடு. தம்மை பிடித்து இருந்த கெட்டவைகள் எல்லாம் அழிந்து போகட்டும் என்று பழகிய பொருட்களை எரித்து...

.. நாளை மலரப்போகும் தை மாதத்தை வரவேற்று வாழ்வில் புதிய வசந்தத்தை காணுவதற்கான முயற்சியாக..... தம் நிலங்களில் விளைந்த விளைபொருட்களை வைத்து பொங்கல் இட்டு கொண்டாடிமகிழும் நாளின் தொடக்கம்...,.இன்று போகியாக கொண்டாடப்படுகிறது.

 அதிகாலையில் நிலைப்பொங்கல் என்னும் நிகழ்வு இல்லத்தின் முன் விளக்கேற்றி வாயில் நிலைக்கு மஞ்சள் பூசி குங்குமம் திலகம் இட்டு பூலாப்பூ வேப்பிலை ஆவாரம்பூ,கரும்பு ,வாழைப்பழம் ,வெற்றிலை- பாக்கு வைத்து ஆராதனை உடன் பூஜை செய்து இறைவனை வழிபட்டு... வடை பாயாசத்தோடு இறைவனுக்கு படையல் இட்டு போகியை கொண்டாடுவர்.

போகி பழைய வாழ்க்கையை விடை கொடுத்து அனுப்பி விட்டு நாளை மலரப்போகும் கையை ஆவலோடு வரவேற்று எதிர்நோக்கி காத்திருக்கும் அறுவடை தினத்தின் முன் நாள் இன்று

தமிழ்நாட்டில் ,கர்நாடகாவில், ஆந்திராவில் தெலுங்கானாவில்கொண்டாடப்படும் மார்கழி மாதத்தின் இறுதி நாள்.போகி பண்டிகை

 

Tags :

Share via