2024-இல் மத்தியில் ஆட்சி அமைத்தால் பின்தங்கிய மாநிலகளுக்கு சிறப்பு அந்தஸ்து-நிதிஷ் குமார்

by Staff / 15-09-2022 04:00:40pm
2024-இல் மத்தியில் ஆட்சி அமைத்தால் பின்தங்கிய மாநிலகளுக்கு சிறப்பு அந்தஸ்து-நிதிஷ் குமார்

நிதிஷ் குமார், டெல்லி சென்று எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்களை சந்தித்தார். 2024இல் ஆட்சி அமைக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், பின்தங்கியிருக்கும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும். நான் பீகாரைப் பற்றி மட்டும் பேசவில்லை. சிறப்பு அந்தஸ்து பெற வேண்டிய மற்ற மாநிலங்களைப் பற்றியும் பேசுகிறேன் என்றார் நிதிஷ் குமார்.

பீகாரில் பாஜகவுடன் கூட்டணியிலிருந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சியாக இருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்தது.

கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி வருகிறார் முதலமைச்சர் நிதிஷ் குமார். ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், மத்திய நிதியுதவி திட்டங்களுக்கான மத்திய-மாநில நிதி விகிதம் 90:10 ஆகும், இது மற்ற மாநிலங்களுக்கான விகிதத்தை விட மிகவும் சாதகமானது.

தற்போதைய நிலையில், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் உள்பட 11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via