செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சரக்குவாகன கட்டணங்களும் உயர்ந்தன.

by Editor / 30-08-2022 04:50:00pm
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சரக்குவாகன கட்டணங்களும் உயர்ந்தன.

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர உள்ள நிலையில், கூரியர் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள், வெளி மாநிலங்களுக்கு இடையே பார்சல், கூரியர் சப்ளையில், 120-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர உள்ள நிலையில், நிதி சுமையை சமாளிக்கும் வகையில், பார்சல் கட்டணத்தை கூரியர் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

இதுவரை 400 கி.மீ., வரையிலான 10 கிலோ எடை கொண்ட பார்சலுக்கான கட்டணம் 150 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 170 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதேபோல் 100 கிலோவுக்கு மேல், 1 டன் வரை 300 ரூபாய் முதல், துாரத்தின் அடிப்படையில் 800 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via