13 மாவட்டங்களில் கனம் முதல் மிக கனமழை வானிலை ஆய்வு மையம்

by Editor / 30-08-2022 04:53:05pm
 13 மாவட்டங்களில் கனம் முதல் மிக கனமழை  வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனம் முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.
 

 

Tags :

Share via
Logo