மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

by Staff / 30-06-2024 03:01:12pm
மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது வாலிபர், காட்பாடி அருகே உள்ள 20 வயது பெண்ணை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார். பின்னர் அந்த பெண் கர்ப்பமானதையடுத்து பெண் வீட்டில் ஏற்றுக்கொண்டனர். பின்னர் குழந்தையும் பிறந்துள்ளது. அப்போது குழந்தையையும் மனைவியையும் பார்க்க அடிக்கடி மாமியார் வீட்டிற்கு சென்ற வாலிபர், தனது மனைவியின் 17 வயது தங்கையை காதலிப்பதாக கூறியுள்ளார். அதற்கும் சிறுமியும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரையும் அழைத்து சென்று தாலி கட்டி மனைவியின் சம்மதத்துடன் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து சிறுமி கர்ப்பமாக இருந்ததை அறிந்த ஊரார் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo