தீப்பிடித்து எரிந்த கார்

by Staff / 19-11-2022 11:15:34am
தீப்பிடித்து எரிந்த கார்

சேலம் மாவட்டம் மேட்டூர் ஆர். எஸ். கவிபுரம் பகுதியை சேர்ந்த கோகுல்நாத் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் ஏற்காடு மலைக்கு சென்றுவிட்டு திரும்பி உள்ளனர். திரும்பி வரும் வழியில் எதிர்பாராதவிதமாக காரில் தீப்பிடித்து எரிய தொடங்கி உள்ளது. உடனே காரில் இருந்து குழந்தையுடன் வேகமாக தம்பதியினர் கீழிறங்கினர். இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இன்றி அனைவரும் உயிர் தப்பினர். பின்னர் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இதுக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories