ஆற்றில் பாய்ந்த பஸ் - ஒருவர் பலி, 10 பேர் மாயம்

by Editor / 26-06-2025 12:17:26pm
ஆற்றில் பாய்ந்த பஸ் - ஒருவர் பலி, 10 பேர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி மாயமான 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ரிஷிகேஷில் இருந்து பத்ரிநாத் நோக்கி 18 பயணிகளுடன் சுற்றுலா பஸ் சென்றுள்ளது. இந்த பஸ் ருத்ரபிரயாக் மாவட்டம் கோல்டிர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து அலக்னந்தா ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்துவருகிறது.

 

Tags :

Share via