அன்புமணி செயல் தலைவர் பொறுப்பை ஏற்க மறுக்கிறார் - ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், தைலாபுரத்தில் இன்று (ஜூன் 26) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராமதாஸ் - அன்புமணி இடையே நிலவும் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், "அன்புமணிக்கு செயல் தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தலைவராக அவர் 3 ஆண்டுகள் தொடர்ந்த பின்னர், கட்சியின் செயல்பாடுகளுக்கு தேவையான பணிகளை செய்ய செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை" என பேசினார்.
Tags :