ஆள் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தியின் விசாரணை நாளை ஒத்திவைப்பு

சென்னை: காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சூழலில் கடத்தல் வழக்கில் போலீசார் தன்னை கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீனுக்காக மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (ஜூன் 26) விசாரணைக்கு வரவிருந்தது. இந்த நிலையில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (ஜூன் 27) ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
Tags :