தாம்பரம் ரயில் நிலையம் அருகே   கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை

by Editor / 23-09-2021 03:18:31pm
தாம்பரம் ரயில் நிலையம் அருகே   கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை



சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவியை இன்று பிற்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் வியாழக்கிழமை மதியம் ஸ்வேதா என்ற கல்லூரி மாணவி நின்று கொண்டிருந்தார். அப்போது மாணவி ஸ்வேதாவை ராமு என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார்.
அதன்பிறகு, அந்த இளைஞரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.


இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் மாணவி ஸ்வேதா உயிரிழந்தார். கத்தியால் குத்திய ராமுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்வாதி என்ற இளம்பெண்ணை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via