கேரள மாநிலத்தில் ஓணம் நாளில் மட்டும் 124 கோடி ரூபாய்க்கு மது விற்பனை.

by Editor / 19-09-2024 12:13:52am
கேரள மாநிலத்தில் ஓணம் நாளில் மட்டும் 124 கோடி ரூபாய்க்கு மது விற்பனை.

கேரள மாநிலத்தில் ஓணம் நாளில் மட்டும் 124 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டை விட 4 கோடி ரூபாய் அதிகமாகும்.அதே நேரத்தில், உத்ராடம் வரையிலான 9 நாட்களில், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, மது விற்பனை குறைந்துள்ளது.கடந்த ஆண்டு 9 நாட்களில் 715 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆன நிலையில், தற்போது, 14 கோடி ரூபாய் குறைந்து 701 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்கள், முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.இந்த புள்ளிவிவரத்தை கேரள மாநில பானங்கள் கழகம் வெளியிட்டுள்ளது.

 

Tags : கேரள மாநிலத்தில் ஓணம் நாளில் மட்டும் 124 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

Share via

More stories

Logo