சிறுமிகளை விலைக்கு வாங்கி இளைஞர்களுக்கு விற்ற கும்பல் கைது

ராஜஸ்தானில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை கடத்தி விற்கும் புரோக்கர்களிடம் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி, மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு ஒரு கும்பல் விற்பனை செய்து வந்துள்ளது. அந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெய்ப்பூர் அருகே ‘காயத்ரி சர்வ சமாஜ்’ என்ற அறக்கட்டளை நிர்வாகிகள், ஏழை பெண்களை கடத்தி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு விற்று வந்துள்ளனர். அங்கிருந்து 16 வயது சிறுமி தப்பிச் சென்று போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.
Tags :