MP வீட்டில் வெடிகுண்டு வீச்சு? காவல்துறை விளக்கம்

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் வெடிகுண்டு ஏதும் வீசப்படவில்லை என காவல் துறையினர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் நாமக்கல் MP மாதேஸ்வரனின் தாய் வசித்து வரும் வீட்டில் இன்று வெடிகுண்டு வீசப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த விஷயத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள மாவட்ட SP அலுவலகம் ஏசி மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாகவும், தீயணைப்பு அதிகாரிகள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது எனவும் கூறியுள்ளது.
Tags :