தலையில் சிலிண்டரை போட்டு தந்தை கொலை: மகன் கைது

சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் 6வது தெருவை சேர்ந்தவர் மதுசூதனன் (68), இவரது மனைவி சாரதா. இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மதுசூதனின் மூத்த மகன் ஜார்ஜ் புஷ் (34), தந்தை மதுசூதனனுக்கு சொந்தமான வீட்டை விற்று பணம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் மதுசூதனன் வீட்டை விற்க முடியாது எனவும், வீட்டில் பெண் பிள்ளைகளுக்கு பங்கு உள்ளது எனவும் கூறி வந்துள்ளார். இதனால் அடிக்கடி தந்தை, மகனுக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு 8 மணி அளவில் ஜார்ஜ் புஷ் வீட்டிற்கு வந்து தனது தந்தையிடம் வீட்டை எழுதித் தர முடியுமா, முடியாதா என கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜார்ஜ் புஷ் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தனது தந்தை மதுசூதனன் தலை, உடம்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கினார். மேலும் மதுசூதனன் அவரிடமிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார். அப்போது அருகில் கிடந்த காலி சிலிண்டரை ஜார்ஜ் புஷ், தந்தை மதுசூதனனின் தலையில் போட்டுள்ளார். மதுசூதனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags :