லாரி டயரில் சிக்கி முதியவர் பலி

by Staff / 05-04-2023 11:53:27am
லாரி டயரில் சிக்கி முதியவர் பலி

அரியலூர் அருகே உள்ள அமீனாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் இன்று காலை செந்துறை சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தனியார் சிமெண்ட் ஆலையின் ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த மினி லாரி, நடந்து சென்று கொண்டிருந்த சுப்பிரமணியன் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த நிலையில் தனியார் சிமெண்ட் ஆலை லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via