ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியடைந்த குரு பகவான் .

by Editor / 11-05-2025 06:15:26pm
ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு  பெயர்ச்சியடைந்த குரு பகவான் .

பெயர்ச்சியடைந்த குரு பகவான் - ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்.


ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாவதை முன்னிட்டு அனைத்து குருபகவான் தளங்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் உள்ள புகழ்பெற்ற தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்கு பல்வேறு வகையான நறுமண பொருட்களில் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கும் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

 குறிப்பாக, குரு பார்த்தால் கோடி நன்மை என்று ஐதீகம் கூறும் நிலையில், குரு பெயர்ச்சி அன்று குரு பகவானே தரிசித்தால் தமது வாழ்வில் எல்லா வளமும் கிடைக்கும் என்பதற்காக ஏராளமான பக்தர்கள் தற்போது புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

 குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய குரு பகவான் தளமான புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி முன்னிட்டு கூட்ட நெரிசல் அதிக அளவில் காணப்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் வளாகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, கோவில் வளாகம் முழுவதும் ஏராளமான சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு சாமியை தரிசனம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன இதன் தொடர்ச்சியாக ஏராளமான  பக்தர்கள் சிறப்பு தரிசன மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஆலய  வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு கரையாளனுர் சண்முகவேல் சார்பில் நடைபெற்றது.

 

Tags : ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியடைந்த குரு பகவான் .

Share via