1700 கோடி ரூபாய் செலவில் 17 திருக்கோவில்களில் பெருந்திட்ட பணிகள்-சேகர்பாபு 

by Editor / 11-05-2025 06:24:29pm
1700 கோடி ரூபாய் செலவில் 17 திருக்கோவில்களில் பெருந்திட்ட பணிகள்-சேகர்பாபு 

கன்னியாகுமரி மாவட்டம் புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பில் கருங்கல் தளம் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இன்று துவங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.  

மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணிகளை துவங்கி உள்ளோம் , முதற்கட்டமாக பவர் பாயின்ட் பிரசன்டேஷன் (PPT ) தயாரிக்கப்பட்டு உள்ளது ,  முதலமைச்சர் அனுமதி பெற்று அந்த பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் , பல பகுதிகளில் முருகன் சிலை அமைக்க திட்டம் உள்ளது  தமிழ் கடவுள் முருகனுக்கு ,இது  தமிழ் ஆட்சி என்பதால் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த சிலைகள் அமைக்கும் பணிகள் விரைவுப்படுத்தப்படும் 

 பெருந்திட்ட வரைவு பணி இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது , கடந்த காலங்களில் இப்படி ஒரு வார்த்தையே கிடையாது , 1700 கோடி ரூபாய் செலவில் 17 திருக்கோவில்களில் பெருந்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது , குமரி மாவட்டத்தில் மட்டும் அறநிலையத்துறை 3 கோடியாக இருந்த அரசு மானியத்தை 33 கோடியாக உயர்த்தியது இந்த அரசு தான். என்றார்.


 

 

Tags : 1700 கோடி ரூபாய் செலவில் 17 திருக்கோவில்களில் பெருந்திட்ட பணிகள்-சேகர்பாபு 

Share via