ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 3 பேர் படுகாயம்

by Admin / 07-10-2021 05:12:43pm
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 3 பேர் படுகாயம்

ஜப்பான், நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்தநிலையில் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இவாத் மாகாணத்தில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது.

 மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சில வினாடிகளுக்கு நீடித்தது. அப்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பயங்கரமாக குலுங்கின.

அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் திடுக்கிட்டு எழுந்த அவர்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும் இந்த நிலநடுக்கத்தில் வீடுகளில் டிவி உள்ளிட்ட பொருட்கள் சரிந்து விழுந்ததில் 80 வயது மூதாட்டி உள்பட 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

அதே வேளையில் இந்த நிலநடுக்கமானது சக்தி வாய்ந்ததாக பதிவானபோதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via