இளைஞர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் தம்பி கைது
தூத்துக்குடியில் இளைஞர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவர் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.டூவிபுரத்தை சேர்ந்த சாமுவேல் அன்னலட்சுமி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஜீவன் ஜோஸ்வா தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று ஜீவன் ஜோஷ்வா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜீவன் ஜோஸ்வா கழுத்தை நெரித்தும் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தம்பி தவமணியை கைது செய்தனர். விசாரணையில் அடிக்கடி குடித்து விட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததால் அண்ணனை கொலை செய்ததாக தவமணி தெரிவித்துள்ளார்.
Tags :



















